Site icon ITamilTv

கோயம்புத்தூர் தீ விபத்து… 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சாம்பலாகியது!!

Coimbatore fire accident

Spread the love

Coimbatore fire accident : கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னி வீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியின் அருகே தரிசு நிலங்கள் அதிகம் உள்ளதால் காய்ந்த புற்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உணவுக்கு குப்பை, பாட்டில்கள் என இந்த இடமே குப்பை கூளமாக இருக்கும்.

இந்நிலையில், நேற்று ஏப்ரல் 29 அன்று மதியம் அந்த தரிசு நிலத்தில், காய்ந்த புற்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

இதையும் படிங்க : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி அட்டூழியம் – இபிஸ் கண்டனம்!

இந்த தீ அப்பகுதியில் வேகமாகப் பரவ திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

காற்றின் வேகம் காரணமாக நெருப்பு அருகில் உள்ள மக்கள் வசித்த குடிசை பகுதியிலும் வேகமாகப் பரவியுள்ளது.

குடிசைகள் அருகருகே அமைக்கப்பட்டு இருந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

தீ பற்றியவுடன் வீடுகளில் தங்கி இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர்.

இதனால் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை எனினும் வீடுகளில் இருந்த உடைமைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகின.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வீடுகளின் கூரைகள் ஓலைகளைக் கட்டப்பட்டிருந்ததாலும் மிகவும் நெருக்கமாக இருந்ததாலும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் சுமார் 50 வீடுகள் முழுவதும் எரிந்து சேதமாகின

தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து மீதியிருந்த வீடுகளைக் காப்பாற்றினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் தங்களின் உடைமைகளை இழந்து தவித்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.

மேலும் இந்த தீ விபத்து இயற்கையாக நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது Coimbatore fire accident.

இதையும் படிங்க : செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு – நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு!


Spread the love
Exit mobile version