Site icon ITamilTv

Collector Request பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்

Collector Request

Collector Request

Spread the love

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும் ? பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். வாழ்க்கையில் கல்வி மட்டும்தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து என Collector Request தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் மழை என்று பெய்தாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சி முன் தான் உட்க்காந்து இருப்பார் இதற்காரணம் ஒன்றே ஒன்று தான்.

லேசான மழை பெய்தால் கூட இன்றைக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை உண்டா என மாணவர்களும் அவர்களது பெற்றோர்களுக்கும் தொலைக்க்கத்தியை விடாமல் பார்த்து வருவார்.

அப்படி ஒரு வேலை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டால் போதும் அன்று தீபாவளி தான் போங்க அனைவரும் இழுத்து போத்தி கொண்டு ஒரு குட்டி தூக்கம் போட சென்றுவிடுவார்கள்.

இவ்வளவு ஏன் உங்களுக்கு தரமான செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் நானே எனது பள்ளி கல்லூரி காலங்களில் அப்படி தான் இருந்தேன்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட குழந்தைகளின் பெற்றோர்கள் இன்று பள்ளி உண்டா என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இது தஞ்சாவூர் மாவட்டத்தில் எடுபடவில்லை அங்கு என்ன ஆனாலும் விடுமுறை இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டார்.

இதுகுறித்து (Collector Request) தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது :

மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய தூறல் வந்து விட்டாலோ பெற்றோர்கள் எனக்கு போன் செய்து, ‘பள்ளிக்கு லீவு உண்டா?’ எனக் கேட்கின்றனர்.

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும் ? நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1ம் தேதி முதலே மழை தொடங்கிவிடும். மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்வேன்.

Also Read : https://itamiltv.com/leo-in-tv-on-pongal/

மழைக்காக விடுமுறை என நினைத்து நான் வீட்டில் இருந்திருந்தால், இன்று உங்கள் முன் ஆட்சியராக நின்றிருக்க மாட்டேன்.

தயவு செய்து பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். வாழ்க்கையில் கல்வி மட்டும்தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version