Site icon ITamilTv

கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை : மனஅழுத்தம் காரணமாக தவறான புகார்!

Spread the love

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இறக்கிவிடப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்த மறுப்பு செய்தி.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி நேற்று தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கி அருகிலிருந்த கழிவறைக்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை இன்னோவா காரில் கடத்தி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,

பின்னர் தன்னை திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும், தான் ஒரு ஆட்டோ மூலம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையம் வந்து புகார் அளித்துள்ளார்.

மேற்படி புகாரினை பெற்று விசாரணை செய்து இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 16/24 u/s 87, 70(1) BNS வழக்கு பதிவு செய்து மேற்படி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், விசாரணை செய்ததில் அம்மாணவி கூறியது போல் எந்தவொரு கடத்தல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதும், அம்மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.


Spread the love
Exit mobile version