குக் வித் கோமாளி நிகழிச்சி மூலம் பிரபலமான நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சென்னையில் ஒரு கோயிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், இப்போது தன்னை கர்ப்பமாக்கி விட்டு சேர்ந்து வாழாமல் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

மாதம்பட்டி ரங்கராஜூம் ஜாய் கிரிசில்டாவும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜாய் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் லிப் லாக் உள்ளிட்ட புகைப்படங்களையம் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து தனது நிறைமாத கர்பத்தை வெளிப்படுத்தும் விதமான புகைப்படங்களையும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றது, தனது குழந்தைக்கு ராஹா என பெயர் சூட்டி இருக்கிறேன் என்பது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாக ரங்கராஜ் மீது புகார் அளித்துள்ளார் ஜாய்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்துத் துன்புறுத்தினார். நான் முடியாது என மறுத்துவிட்டேன். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதே எனக்குத் தெரியாது. எனக்கு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். அவருடன் என்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என மனு அளித்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி உடனான திருமண உறவை தாண்டியே, ஜாயை காதலித்து ரங்கராஜ் திருமணம் செய்துள்ளார். இது ரகசியமாகவே இருந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாகவே ஜாய் திருமண புகைப்படங்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரங்கராஜ் தரப்பு அதிருப்தி அடைய, அதன் உச்சபட்சமாகவே ஜாய் காவல்துறையை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.