ITamilTv

காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடாவின் சர்ச்சை கருத்து- பா.ஜ.க. கண்டனம்!

Sam Pitroda

Spread the love

Sam Pitroda : காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடாவின் கருத்து இந்தியாவின் கலாசாரத்தையும், அடையாளத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக பா.ஜ.க. கண்டம் தெரிவித்துள்ளது.

அவர் அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சீனர்களைப் போலவும், தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும்,

மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வட இந்தியர்கள் வெள்ளையர்களைப் போலவும் இருப்பதாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க : பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் (Sam Pitroda) கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதாவது, அவரது இந்த கருத்து இந்தியாவின் கலாசாரத்தையும், அடையாளத்தையும், இந்திய மக்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக பா.ஜ.க. கண்டம் தெரிவித்துள்ளது. .

இதுகுறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..,

“தென்னிந்தியாவைச் சேர்ந்த நான், இந்தியராகவே தெரிகிறேன். எங்கள் கட்சியில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த உற்சாகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியராகவே தெரிகிறார்கள். மேற்கு இந்தியாவைச் சேர்ந்த எனது சகாக்களும் இந்தியர்களாகவே தெரிகிறார்கள்.

ஆனால் ராகுல் காந்தியின் வழிகாட்டியான இனவெறியர்களுக்கு நாம் அனைவரும் ஆப்பிரிக்க, சீன, அரேபியர் மற்றும் வெள்ளையர்களாகத் தெரிகிறோம்!

உங்கள் மனநிலையையும், உங்கள் அணுகுமுறையையும் வெளிப்படுத்தியதற்கு நன்றி. இது ‘இந்தியா’ கூட்டணியின் அவமானம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியும், இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்கு சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கள் மிகவும் தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளது.

அவரது பேச்சுக்களுக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்காது எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின்னர் இடமாறுதல் கலந்தாய்வை நடத்திடுக – ராமதாஸ்!


Spread the love
Exit mobile version