தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில்(telangana assembly election) காங்கிரஸ் கட்சி, திருமணத்தின் போது மணமகளுக்கு 10 கிராம் தங்கமும், ஏழைகளுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டரும் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி தெலங்கானா மாநில சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கு பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி, தெலுங்கு தேசம், ஓவைசியின் கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் ஜனசேனா கட்சி போட்டியிடுகின்றன.
இந்நிலையில்,சந்திரசேகர ராவ் தனது தேர்தல் வாக்குறுதியில் முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.5,016ம், சமையல் காஸ் சிலிண்டர் ரூ.400க்கும், பெண்களுக்கு மாத உதவி தொகை ரூ.3,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும்,தெலங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் திருமணம் செய்யும் மணப்பெண்ணுக்கு 10 கிராம் தங்கமும், ஏழைகளுக்கு ரூ.500 சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் மாதம் ரூ.2,500 உதவி தொகை வழங்குவது தொடர்பாக தீர்மானம் விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.