தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு ( construction works ) விதித்து தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது .
எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் சில மாவட்டங்களில் கோடை வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருகிறது.
இந்நிலையில் இந்த கடுமையான வெப்பத்தில் இருந்து மக்கள் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Also Read : சபரிமலை கோயில் நடை திறப்பு..!!
அந்த வகையில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது .
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மே மாத ( construction works ) இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .