Site icon ITamilTv

”சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..”தேர்தல் கபட நாடகம்..-கே.பாலகிருஷ்ணன்!

cooking gas price

cooking gas price

Spread the love

gas price-சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக வீதி தோறும் போராடிய பாஜக, 9 ஆண்டு காலம் மக்கள் போராடிய போதும் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு தற்போது ரூ.100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சமையல் எரிவாயு என்றால் அது பெண்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே என்று மோடி அறிவிப்பது ஆணாதிக்கதின் வெளிப்பாடாகும். பெண்களை சமையல் அறையில் கட்டிப்போடும் வர்ணாசிரமத்தை தூக்கி கொண்டாடுவதாகும்.

இதையும் படிங்க:“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்..!” ஆளுநர் ஆர்.என்.ரவி மகளிர் தின வாழ்த்து

2014-ம் ஆண்டு பெட்ரோலியப் பொருட்கள் மூலம் ரூ. 1,26,025 கோடியாக இருந்த மத்திய அரசின் வரி அதிகபட்சமாக 2021-2022ல் ரூ. 4,31,609 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ, 26,73,978 கோடி மக்களிடமிருந்து வரியாக மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் விலையேற்றப்படும் போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர பல கட்சிகளும் அதை எதிர்த்தும், போராடியும் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களும் போராடியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் உக்ரைன் போரையொட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலை பாதியாக குறைந்த போதும்கூட மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை குறைக்க முன்வரவில்லை.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1766039764590014489?s=20

தான் எதிர்கட்சியாக இருந்தபோது சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக வீதி தோறும் போராடிய பாஜக, 9 ஆண்டு காலம் மக்கள் போராடிய போதும் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு தற்போது ரூ. 100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.

மக்கள் நலனில் மோடி அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல் வாக்குறுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் மாதம் சத்தீஸ்கரில் மோடியின் கேரண்டி என்று வாக்குறுதி அளித்தது போல,

ரூ. 500-ஆக சிலிண்டர் விலையை (cooking gas price) குறைக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version