உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலக அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அவரை கைது செய்தனர் .
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில்,ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது;அவருக்கு உடனே பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர் .
இதனையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நீதிபதி அல்லி நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் .
இந்நிலையில் ஜாமின் கேட்டும் பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனைக்கு தன்னை மாற்றவும் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது . இந்த பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது . இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது . அமலாக்க துறையின் மனு மீது நீதிமன்றம் முடிவெடுத்த பின் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனுமீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.