இந்தியாவின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், தனது பதவியை கடந்த ஜூலை 21-ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
இதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணி தேசிய ஜனநாயக சார்பில் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.