Site icon ITamilTv

பெண்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி – டி.டி.வி வாழ்த்து!

TTV Dinakaran

TTV Dinakaran

Spread the love

TTV Dinakaran : பெண்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம்,

சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உறுதியேற்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மகளிர் தின வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சைக்கிள் சின்னம் கிடைக்காவிட்டால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் – ஜி.கே.வாசன்!

இதுகுறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் (TTV Dinakaran) வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது..

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு உதாரணமாக திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் சிசுக் கொலையை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் கூடிய,

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்,

இதையும் படிங்க : International Women’s Day : சமூகத்தின் சரிபாதி பெண்கள்.. முதல் அமைச்சர் வாழ்த்து!!

பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெண்கள் பாதுகாப்பிற்காக மகளிர் காவல்நிலையங்கள் என,

மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இந்நாளில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.

பெண்கள் பெற்ற உரிமைகளை பேணிக்காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய இன்றைய சமுதாயத்திலும்,

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பளங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது.

இதையும் படிங்க : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 6 நாட்கள் மலர்க் கண்காட்சி

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக் கொடுத்த சமதர்ம கொள்கையின்படி பெண்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து,

பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version