Site icon ITamilTv

வாக்குப்பதிவின் போது குண்டு வெடிப்பு! சத்தீஸ்கரில் நடந்த பயங்கரம்

CRPF Soldier Attack

CRPF Soldier Attack

Spread the love

CRPF Soldier Attackசத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பணியில் இருந்து சிஆர்பிஎப் வீரர் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதன்படி,சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், பைரம்கர்க் அடுத்த சின்ஹா என்ற கிராமத்தில் திடீரெனெ ஐஇடி வெடிகுண்டு பலத்த சத்ததுடன் வெடித்தது.

இதையும் படிங்க: மணிப்பூர் தேர்தலில் துப்பாக்கி சூடு.. அலறியடித்து ஓடிய மக்கள்!

இந்த சம்பவத்தில் சிஆர்பிஎப் உதவி கமாண்டோ வீரர் படுகாயம் அடைந்து உள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சக வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பஸ்டர் மாவட்ட நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

முன்னதாக இதே போல் பிஜாபூர் மாவட்டத்தில் கிரெனேட் லாஞ்சர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் மற்றொரு சிஆர்பிஎப் வீரர் படுகாயும் அடைந்தார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது.


Spread the love
Exit mobile version