தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருந்த நிலையில் தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருந்த நிலையில் தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.