Site icon ITamilTv

ராகுலுக்கு புதிய பாஸ்போர்ட்..டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன…?

Spread the love

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு(rahul gandhi) 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதனை அடுத்து அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கி மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி ஜாமீன் பெற்றுள்ள நிலையில் தனது சிறப்பு பாஸ்போர்ட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் ராகுல் காந்தி(rahul gandhi )அமெரிக்கா செல்ல இருப்பதை முன்னிட்டு புதிய கடவு சீட்டுக்கு தடையில்லா சான்று வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் புகார்தாரர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விண்ணப்பதாரரை வெளிநாடு செல்ல அனுமதிப்பது நடந்து கொண்டிருக்கும் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்று மனு தாக்கல் செய்தார்.

ஆனால் இந்த வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜாமீன் பெற்றுள்ள ராகுல் காந்திக்கு பயண கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று ராகுல் தரப்பில் வாதிடப்பட்டது.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. வாழ்க்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தி வெளிநாடு செல்வதற்கு புதிய பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.


Spread the love
Exit mobile version