Site icon ITamilTv

டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டம் – தமிழ்நாடு முதல்வர் பங்கேற்பு!

Spread the love

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ‘ இந்தியா ‘ கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 2024 பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இதன் முதல் கூட்டம் இன்று திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டெல்டா மாவட்ட உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை திருவாரூர் தஞ்சை மத்திய, தெற்கு திருச்சி மத்திய மற்றும் திருச்சி தெற்கு, வடக்கு புதுக்கோட்டை தெற்கு வடக்கு ஆகிய 15மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொறுப்பாளர் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் ஆர்.எஸ்.பாரதி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் கே.என்.நேரு, ஆ.ராசா, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் கழக நிர்வாகிகள் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாசறை நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதல்வரும் கட்சியின் தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் 1952ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் தான் நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம். கழகத்தின் கோட்டை மட்டும் அல்ல – தீரர்கள் கோட்டம் தான் இந்த திருச்சி. நேரு என்றால் மாநாடு – மாநாடு என்றால் அது நேரு என்று அடிக்கடி நான் கூறுவேன்.

மிக குறுகிய காலத்தில் இந்த வாக்குச்சாவடி கூட்டத்தை நடத்தி இருக்கும் கே.என் நேரு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. 12,645 வாக்குச்சாவடிகளில் இருந்து ஒவ்வொருவர் வந்து இருக்கிறீர்கள் – உங்களை பற்றி முழுமையாக கேட்டேன்,சிலரை மாற்ற சொல்லி இருந்தேன். பல ஆய்வு கட்டத்திற்கு பிறகே வாக்குச்சாவடி அடையாள அட்டை உங்களுக்கு அளிக்கப்படுகிறது. நவீன தமிழகம் மற்றும் திராவிட மாடல் ஆட்சி அனைத்தையும் அறிந்து இருப்பீர்கள்.

கழகம் துவங்கி 75 ஆண்டுகள் ஆகிறது – நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர் நோக்கி இருக்கிறோம். கலைஞர் நூறாண்டு பிறந்த நாள் விழா – கழகத்தின் 75 வது ஆண்டு விழாவில் நான் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறி கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கும் நீங்கள் தான் காரணமாக இருக்கும் – உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் நான் 40ம் நமது என்று நம்பிக்கை கூறி வருகிறேன்.

வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது தான் உங்களது முதல் பணி – தினமும் வாக்காளர்களை சந்தித்து பரப்புரை செய்வது – நம் சாதனைகளை எடுத்து கூறுவது – வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வர வழைக்க வேண்டும். வாக்குச்சாவடியில் – உங்களது வாக்காளர் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக நீங்கள் மாற வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நீங்கள் கொண்டுவரப்படும் கோரிக்கை கண்டிப்பாக நான் நிறைவேற்றுவேன். மீண்டும் மீண்டும் நாம் புன்னகையோடு. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவில் இந்த ஆட்சி நடந்து வருகிறது எங்களுக்குள் குறை இருக்கலாம் ஆனால் ஆட்சியில் எந்த குறையும் இருக்காது. முதலெல்லாம் நான் பயணம் செல்ல போனால் ஆயிரக்கணக்கான மனுக்கள் தருவார்கள் – இப்போது அது நூற்றுக்கணக்காக மாறி விட்டது – இதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பொய் சொல்பவர்கள் – குறை கூறுபவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் … ஆனால் நீங்கள் நம் சாதனையை சொல்லுங்கள்.

சமூக ஊடகம் தான் இன்று சிறப்பான தளமாக உள்ளது – சமூக வளைதளங்களில் கணக்கு தொடங்குகள் – கண்டிப்பாக அதில் பதில் பேசுங்கள், நலத்திட்டங்களை பேசுங்கள். காலம் மாறி இருக்கிறது – எல்லாம் வாட்ஸ் ஆப்பில் பேசு கிறார்கள். தெரிந்தோ தெரியாமாமோ ஆளுநர் ஒருபக்கம் நமக்கு எதிராக பேசி வருகிறார் – ஆளுநர் தேர்தல் வரை கூட இருக்கட்டும் – நமக்கு இன்னும் வாக்குகள் அதிகரிக்கும்.

நம் தொண்டர் பலம் போல் தமிழகத்தில் அல்ல – இந்தியாவிலேயே அல்ல – உலகிலேயே இல்லை. மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது – தமிழகத்தில் சட்ட பேரவை,
அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். மாநிலங்களில் பல்வேறு மொழி,பல்வேறு கலாச்சாரத்தில் உள்ள அனைவருக்கும் எதிரான கட்சி தான் பா.ஜ.க. 26 கட்சிகள் ஒன்று இணைந்தோம் – இந்தியாவை காபாற்ற போது இந்த INDIA கூட்டணி தான்.

மத்திய பிரதேசம் சென்றாலும் மோடி திமுகவை தான் திட்டுகிறார்கள். இது வாரிசுகளுக்கான கட்சி தான் – ஆரியத்தை வீழ்த்த பெரியாரின் வாரிசுகள் – அண்ணாவின் வாரிசுகள். குஜராத்தில் நடந்ததை தற்போது மணிப்பூர் நினைவிற்கு கொண்டு வருகிறது – மணிப்பூர் பா.ஜ.க சட்ட பேரவை உறுப்பினரே அழகாக கூறி இருக்கிறார் – பா.ஜ.க காவல்துறைதுடன் சேர்ந்து மக்களை தாக்குகிறது என்று அவரே சொல்கிறார்.

மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் உள்ளாட்சி அமைப்புகள் முதல் அனைத்தையும் காலி செய்து விடுவார்கள். MPக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வட மாநில MP க்கள் மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டமிடுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா பாதிக்கப்படும்.

பழனிச்சாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழலை பற்றி பிரதமர் பேசுகிறார் – இவர்களை இந்த தேர்தலில் நாம் முழுமையாம தோற்கடிக்க வேண்டும். முத்துவேல் கருணாநிதியின் போர்படை தளபதிகள் நீங்கள் – உங்களை நம்பி தான் நான் இந்த பொறுப்பை கொடுத்து இருக்கிறேன். “இந்தியா வெல்லும் அதை 2024 சொல்லும்” என பேசினார்.


Spread the love
Exit mobile version