ITamilTv

Tenkasi |’இடித்து தள்ளப்பட்டகோவில் சுவர் ‘.. ஆக்ரோஷமாக சாமியாடிய பெண்..! மிரண்டு போன அதிகாரிகள்

Spread the love

தென்காசி( tenkasi) மாவட்டம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த வேப்ப மரத்தையும் அதன் அடியில் ஒரு பீடத்தையும் அதிகாரிகள் இடித்து முடிக்க முயன்ற போது பெண் சாமியாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி( tenkasi )மாவட்டம் வடகரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள காலி இடத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வேப்ப மரத்தின் நடிகர் ஒரு பீடத்தை அமைத்து நீண்ட நாட்களாகக் கடவுளாக வழிபட்டு வந்திருந்தன.
இந்த பகுதி அரசாங்கத்திற்குச் சொந்தமான பகுதி என்றும் இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வேப்ப மரத்தையும் அதன் அடியில் ஒரு பீடத்தையும் ஆக்கிரமித்து வழிபாடு நடத்தி வருவது தொடர்பாக வா வா மைதீன் என்பவர் 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவு கடைப்பிடிக்கப்படாமல் சில நாட்களாகக் கிடைப்பிலேயே போடப்பட்டு இருப்பதைக் கண்டு மீண்டும் வா வா மைதின் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்ற மீண்டும் உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து வடகரை பேரூராட்சி செயல் அதிகாரி தமிழ்மணி தலைமையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அகற்ற முயன்ற பொது இது கோவில் நிலம் என்றும் அதனை அகற்றக் கூடாது எனக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சில பெண்கள் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை ஏற்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சுவரை இடித்து அந்த பகுதிக்கு யாரும் நுழையாதபடி கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் வடகரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Spread the love
Exit mobile version