தமிழகத்தில் கடந்த 42 நாட்களில் 720 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் வகை கொசுகள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன.
Also Read : மருங்கூர் அகழாய்வில் பழங்கால கண்ணாடி மணி கண்டெடுப்பு..!!
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 42 நாட்களில் டெங்கு காய்ச்சலால் 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.