Site icon ITamilTv

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை..!!

Disciplinary action

Disciplinary action

Spread the love

பள்ளிக்கு சரியாக வராமல் வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்தும் விவகாரங்களில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அதன்படி பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறுநபர் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டால் அல்லது இதுசார்ந்த புகார்கள் பெறப்பட்டால் அதன் மீது தனிக் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

Also Read : 200 கோடி வசூலை கடந்த எஸ்.கேவின் அமரன் திரைப்படம்..!!

அந்த விசாரணையில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், பள்ளியில் இத்தகைய தவறுகள் நடைபெறும் போது அதன் விவரத்தை உயர் அதிகாரிகளுக்கு வழங்க தவறும்பட்சத்தில் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீதும் துறைசார்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version