Site icon ITamilTv

விவாதத்திற்குள்ளாகும் குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

Group 4

Group 4

Spread the love

குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகள் குறித்துதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

குறைதீர் அழைப்பு மையம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி :

ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி IV, 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா?

2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

Also Read : ராமாயண நாடகத்தை சாக்காக வைத்து சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் – வெளியன் அதிர்ச்சி தகவல்..!!

2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.

எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது .


Spread the love
Exit mobile version