ITamilTv

தரமற்ற வீடுகள்..கைபட்டு உதிரும் சிமெண்ட்..! ஒப்பந்ததாரரை விளாசிய மாவட்ட ஆட்சியர்..!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக இருளர், பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு (construction) வரும் நிலையில், இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, அமைச்சர் கயல்விழி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது, வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, கையில் சிமெண்ட்டை பெயர்த்தெடுத்த போது சிமெண்ட் கையேடு உதிர்ந்து வந்த நிலையில், இதுகுறித்து சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 4.65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படி தரமற்ற முறையில் வீடுகளை கட்டுவதற்குத்தான் ஒப்பந்தம் எடுத்தீர்களா என்றும் அவரை விளாசினார்.

அந்த வீடியோ காட்சிகள் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, புதிதாகக் கட்டப்படும் வீடுகளை (construction) நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி மற்றும் அமைச்சர் கயல்விழி நிருபர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்கு, 443 வீடுகள் கட்டித்தர, கடந்த 2020-21 ம் ஆண்டு நிதி அறிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.

அதன்படி, தற்போது வீடு கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, 2021-22 ம் ஆண்டு அறிக்கையில், 50 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

construction

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இயங்கும் பள்ளிகளுக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும்,

இதன் மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கும் பள்ளிகளும், விடுதிகளும் சரி செய்யப்படும் என்றும், மேலும், ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு, 192 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.


Spread the love
Exit mobile version