ITamilTv

500 டாஸ்மாக் கடைகளை மூடுவது போல் மூடிவிட்டு 2000க்கும் மேற்பட்ட கடைகளை திறந்துள்ளார்கள் – கிருஷ்ணசாமி காட்டம்

Spread the love

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு நாள் நிகழ்ச்சி நிகழ்ச்சி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற இருக்கிறது.தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் 33 வருடங்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி தான் அதை தொடங்கிவிட்டது.

2012 ம் ஆண்டு சில அசம்பாவிதம் நடந்தது. அதனை தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தியாகி இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்கு செல்லும் போது காவல்துறையினர் இடையூறு செய்கிறார்கள். அதனை காவல்துறை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசே மதுபானத்தை விற்க ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கள்ளச்சாராயத்தை தடுக்க போகிறோம் நல்ல மதுவை கொடுக்கப் போகிறோம் படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்துகிறோம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள்.

அரசாங்கமே மதுவில் வரக்கூடிய பணத்தை வைத்து தான் அரசை நடத்தக்கூடிய சூழலில் உள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மூடப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி கொடுத்துவிட்டு பட்டி தொட்டி எல்லாம் மதுவை வளர்த்து வருகிறார்கள்.

கடைசியாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது போல் மூடிவிட்டு 2000க்கும் மேற்பட்ட கடைகளை மீண்டும் திறந்து உள்ளார்கள். மது பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகிறார்கள் வன்முறை ஏற்படுகிறது. 5362 கடைகளில் உள்ள பார்கள் சட்ட விரோதமாக செயல் படுகிறது. முறையாக பணம் செலுத்தாமல் உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்


Spread the love
Exit mobile version