Site icon ITamilTv

“கடைசி நேரத்தில் சபாஷ் வாங்கிய ஸ்டாலின்..!” அவசர கதியில் வெளியான அந்த அரசாணை..!

Dual caste certificate system

Spread the love

Dual caste certificate system : தமிழகத்தில் கூத்தப்பார் கள்ளர், முத்தரையர், அம்பலத்தார் பேரவை உள்ளிட்ட 68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு 1979-ம் ஆண்டு வரை குறிக்கப்பட்ட பழங்குடியினர் (டி.என்.டி) என்றே சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால், 1979-ம் ஆண்டு முதல் பிழையான ஒரு ஆணை மூலம் குறிக்கப்பட்ட சமூகம் (டி.என்.சி.) என மாற்றப்பட்டு பழங்குடி மாணவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா கல்வி உள்ளிட்ட பல சலுகைகள் பறிக்கப்பட்டு விட்டதாக சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

அதேவேளையில் தமிழக அரசு சீர்மரபினர் மக்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.டி.யை டி.என்.சி.யாக மாற்றி 8.3.2019 அன்று ஒரு அரசாணை மூலம் திரும்ப பெற்று விட்டது.

ஆனாலும், தமிழகத்தில் தொடர்ந்து டி.என்.சி. என்று சாதிச்சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதே வேளையில் மத்திய அரசின் உரிமைகளை பெற டி.என்.டி. என்றும் அழைக்கப்படுவர் என இரட்டை சான்றிதழ் முறையை (Dual caste certificate system) ஏற்படுத்தி விட்டது.

இதனால், அச்சமுதாய மக்கள் கல்வி அற்றும் வேலை வாய்ப்புகளுகாக 2 வகையான சான்றிதழ்களை வருவாய்த்துறையிடம் இருந்து பெற் வேண்டி இருந்த்தால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்த தவறை சீரமரபினர் நலச்சங்கம் சுட்டிக்காட்டியதன் பேரில்,

“கடந்த, 2021 மார்ச் மாதம், தமிழக சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், ஆலங்குளம் தொகுதியில் பேசும்போது, “தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சீர்மரபினருக்கு வழங்கப்படும் இரட்டை ஜாதி சான்றிதழ் முறையை ஒழிப்போம்” என அறிவித்தார்.

ஆனால், பாராளுமன்ற தேர்தல் வரவிருந்த நிலையிலும் கூட அதற்கான ஏற்பாடுகளை எதியும் செய்யாமல் இருந்த காரணத்தால் தமிழ்கம் முழுக்க உள்ள சுமார் 1.5 கோடி சீர் மரபினரும் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில்தான்,

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு சற்று முன்பாக சீர் மரபினர் சான்றித்ழ் தொடர்பாக ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், “சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு ( Criminal Tribes Act) வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கருணாநிதி தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல்

அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், “அரசாணை (நிலை) .26. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,

நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் 20 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர்,”எனவும்,

“மத்திய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர்” எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்களுக்குப் (Dual caste certificate system) பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபின வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு சற்று முன்னதாக வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையானது இந்த தேர்தலில் சீர்மரபினர் சமூக மக்களிடம் திமுக அரசு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


Spread the love
Exit mobile version