ITamilTv

கனமழை காரணமாக திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை..!!

Spread the love

தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ள பருவ மழையால் திருவாரூர், காரைக்கால் உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.10 ) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார் . கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவ.10 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிவகங்கை உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version