ITamilTv

அதிகனமழை எச்சரிக்கை – தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

Spread the love

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 22-ந் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படியே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் வீடுகள், தெருக்கள், வயல்கள் என மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகிறனர்.


மேலும் கனமழை காரணமாக வைகை அணை, அமராவதி அணை, முல்லை பெரியாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. மேலும் நாளையும் கனமழை தொடரும் என எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது


Spread the love
Exit mobile version