Site icon ITamilTv

“நீ ஒருத்தனுக்கு பிறந்திருந்தா..”கொந்தளித்த துர்கா ஸ்டாலின் தம்பி ராஜமூர்த்தி!!

Spread the love

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சைக்குப் பரிந்துரைத்த ESI மருத்துவ குழுவினருக்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என துர்கா ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 14 தேதி அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் எந்த வித முன்னறிவிப்பின்றி அவர் கைது செய்யப்பட்டார்.இந்த கைது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அப்போது அங்குச் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சென்னை KK நகர் ESI மருத்துவமனையின் இதயவியல் துரையின் 4 மருத்துவக் குழு செந்தில் பாலாஜியின் உடனிலை குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் முடிவில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ESI மருத்துவக் குழு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி ESI இயக்குநர் என்பதால் செந்தில் பாலாஜியைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று அதிமுக மற்றும் பாஜக குற்றம்சாட்டினார். இதனையடுத்து ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ராஜமூர்த்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சைக்குப் பரிந்துரைத்த ESI மருத்துவ குழுவினருக்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தெரிவித்த அவர் சென்னை KK நகர் ESI மருத்துவமனை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களை அனுப்பியது தான் என்று நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.


Spread the love
Exit mobile version