ITamilTv

அத்துமீறிய ஆன்லைன் டெலிவரி பாய்… பெண்களுக்கு நிர்வாண படங்களை அனுப்பி பாலியல் சீண்டல்! அதிரடி கைது..!

Spread the love

மகாராஷ்டிராவில், 25 பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆன்லைன் டெலிவரி பாய் (delivery boy) ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மாலட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயதுடைய ஜோதிராம் பாபுராவ் மன்சுலே. இவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக (delivery boy) பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், ஜோதிராம் தான் டெலிவரிக்கு செல்லும் வீடுகளில் பெண்கள் ஆர்டர் செய்திருந்தால், அவர்களின் செல்போன் எண்களை சேகரித்து தன்னுடைய தனிப்பட்ட செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

பின்னர், அந்த பெண்களுக்கு வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மாலாட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியும், வீடியோ கால் செய்து அந்தரங்க உறுப்பை காட்டியும் ஜோதிராம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிதுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட டெலிவரி பாய் ஜோதிராமை கைது செய்தனர்.

delivery boy

அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் ஜோதிராமின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஜோதிராமை போரிவிலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் தற்போது காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Spread the love
Exit mobile version