திருவாரூர் (tiruvarur)மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி(Chicken biryani )சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம்-(tiruvarur) திருவாசல் மெயின் ரோட்டில் வசிப்பவர் விக்னேஷ் (29), இவரது மனைவி மாரியம்மாள் (26). மாரியம்மாள் 5 மாத கர்ப்பிணி. இந்நிலையில், அவருக்கு ஐந்தாவது மாதத்திற்கான மருந்து வழங்கும் நிகழ்ச்சி விக்னேஷ் வீட்டில் நடந்துள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், ஏலக்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது. இதை சாப்பிட்ட கர்ப்பிணி உள்பட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு 5 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி(hospital) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கர்ப்பிணிப் பெண்ணின் தந்தை அடியக்கமங்கலம் அரசு மருத்துவமனையிலும், நான்கு வயது குழந்தை திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் (hospital)கர்ப்பிணி மாரியம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸார் உயிரிழந்ததிற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.