Site icon ITamilTv

Minister senthil balaji வீட்டில் மீண்டும் ED ரெய்டு!

Minister senthil balaji

Minister senthil balaji வீட்டில் மீண்டும் ED ரெய்டு!

Spread the love

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் (Minister senthil balaji) வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடந்து ஜாமின் வழங்ககோரி செந்தில்பாலாஜி (Minister senthil balaji) தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

https://x.com/ITamilTVNews/status/1755453785709961576?s=20

இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்

இந்த நிலையில், இன்று காலை 7.30 மணியளவில், கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்ட நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Spread the love
Exit mobile version