Site icon ITamilTv

”வெளிநாடு பயணம் இல்ல ..”அது இன்ப சுற்றுலா பயணம்.. கடுமையாக சாடிய ஈபிஎஸ்!

Spread the love

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று சிங்கப்பூர் செல்லவிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நேரு, பொன்முடி,துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் புத்தகங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த வழி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு சிங்கப்பூருக்கான இந்திய தூதர் உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு பயணத்தை விமர்சனம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில்,2021-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஏழை பங்காளனாகவும், ஊழலை ஒழிக்கும் போராளியாகவும், சாமானிய மக்களின் தோழனாகவும் நடித்து பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மக்களை நம்ப வைத்து,

வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தைக் காட்டி, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தனி விமானத்தில் மதுரைக்கும், அங்கிருந்து கொடைக்கானலுக்கும் இன்பச் சுற்றுலா சென்று வந்தவர்தான் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.

பிறகு ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார்.

6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை சுட்டார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து இதுவரை முதலமைச்சர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை.

தொழில் சுற்றுலா என்று விடியா அரசின் முதலமைச்சருடைய மகன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தமிழக மக்களைப் பற்றி கவலையில்லாமல் மாறிமாறி லண்டன் மற்றும் வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட விடியா அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா
மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து பேசிய ஆடியோ டேப் லீக் ஆனவுடன், மருமகனும், மகனும் பதறிப் போய் உடனடியாக லண்டன் சென்று வந்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் இன்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து தமிழ் நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா ? என்று தமிழக மக்களும் சமூக ஊடகங்களும் கேள்வி எழுப்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version