ITamilTv

இந்திய கட்சிகளுக்கு பாகிஸ்தான் நிறுவனம் தேர்தல் நிதி வழங்கியதா? ரெக்கை கட்டும் சர்ச்சை!

Election Fund issue

Spread the love

Election Fund issue : இந்திய அரசியல் கட்சிக்கு பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனம் ஒன்றும் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ளதாக எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள ஆவணத்தில் தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மின்சார உற்பத்தி நிறுவனமான ஹப் பவர், இந்திய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி உதவி அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ஒரே நாளில் இந்த நிறுவனம் 95 லட்சம் ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கியிருப்பது ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய மார்ட்டின்…பா.ஜ.க.வுக்கா? திமுகவுக்கா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கடந்த 2019-ஆம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, பாகிஸ்தானின் ஆதரவு பெற்றதாக கூறப்படும் ஜெய்சு இ முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தியா முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தால், பாகிஸ்தான் மீது பொதுமக்கள் அதிருப்தி காட்டி வந்த நிலையில்தான்,

ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள HUB Power company என்ற நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் பாகிஸ்தானிடம் இருந்து எப்படி நன்கொடை பெறலாம்? அது எந்த கட்சி என்று கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் பத்திரம் விதிகளின்படி இந்தியாவில் உள்ள நிறுவனங்களே தேர்தல் பத்திரத்தை வாங்க முடியும் என்றும்,

மேலும் பாகிஸ்தானின் HUB Power company நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ளதாகவும், அதனிடம் இருந்துதான் பணம் பரிவர்த்தனை (Election Fund issue) செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானில் இருந்து பணம் வரவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : “என்னது, தேர்தல் பத்திர தரவுகளில் இதெல்லாம் இருக்காதா..?” – அதிர்ச்சி தரும் வங்கி வல்லுனர்!

இதனிடையே பா.ஜ.கவுக்குத்தான் இந்த தேர்தல் நிதி வழங்கப்பட்டதாகவும், புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவருக்கு 2 ஆண்டுகள் கழித்து பா.ஜ.கவில் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும்,

உள்துறை அமைச்சர் பங்கேற்ற கூட்டத்திலேயே ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் NIA -வால் தேடப்படும் தீவிரவாதி பங்கேற்று போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.


Spread the love
Exit mobile version