Site icon ITamilTv

மத்திய ஆயுத படை: 26,146 CAPF பணியிடங்கள்..!! உடனே Apply பண்ணுங்க..

Spread the love

Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination – மத்திய ஆயுத படைகளில் (CAPFs) காலியாக உள்ள காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காலியாக உள்ள தலைமையாக காவல் படை மற்றும் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமார் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 26,146 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆண்கள் காவல் படையின் கீழ் 23347 இடங்களும், பெண்கள் பிரிவின் கீழ் 2799 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01-01-2024 அன்று வயது 18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்

தேர்வு செய்யப்படும் முறை:

மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு முறை இருக்கும். எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆயுதப் படைகளின் விருப்பங்கள் படியும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

கடைசி தேதி:

இதற்கான விண்ணப்பங்களை ssc.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31-12-2023 மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 01-01-2024.

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள். ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

SSC Recruitment Tentative Examination calendar for the year 2024 check details: 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (CALENDAR OF EXAMINATIONS) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது


Spread the love
Exit mobile version