Site icon ITamilTv

”வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..”ரோட்டில் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

Spread the love

“எந்த சோதனையாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க தயார் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கும் விளக்கம் அளிக்க தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி (senthilbalaji) தெரிவித்துள்ளார்”

கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மது பான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினரின் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டிலும்  சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் அமலக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர்  அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் கைப்பற்றப்பட்டதாக  வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் இன்று சென்னை பசுமை வழி  சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் வருமான வரித்துறைகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காலை நடைபயணம் மேற்கொண்டு வீடு திரும்பும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,

சோதனை நடப்பது குறித்து முதலில் தகவல் இல்லை என்றும் சோதனை குறித்த தகவல் கிடைத்த பின்னர் நடை பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு வாகனம் மூலம் வீட்டிற்கு வந்ததாகவும்எனக்கு தகவல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, சட்டபடி சொல்லவும் மாட்டார்கள் என கூறினார்.

மேலும், என்ன நோக்கத்தில் , என்ன தேட வந்துள்ளார்கள் என்று பார்ப்போம் , சோதனை முடியட்டும்எனவும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் எனவும் ஐ டி யாக இருந்தாலும் இ டி யாக இருந்தாலும் எந்த சோதனை என்றாலும் ஒத்துழைப்பு அளிக்க தயார் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version