Site icon ITamilTv

சொத்துக்களை கையப்படுத்திய ED..சிக்கலில் திமுக எம்.பி ராசா!

Spread the love

திமுக துணை பொதுச்செயலாளரும் ,முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராஜாவுக்குச்(ARaja) சொந்தமான 15 அசையாச் சொத்துகளை அமலாக்க துறை கைப்பற்றியுள்ளது.

முன்னாள் மத்தியஅமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து அவர் மீது கடந்த 2015 ஆண்டு சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டர்னர்.

அப்போது சென்னை ,கோவை, திருச்சி, பெரம்பலூரில் ஆ ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றிய நிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆ ராசா உள்ளிட்ட 5 மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அமலாக்க துறை அதிகாரிகள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் 2004 – 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய சுற்றுசூழல் அமைச்சராக இருந்த ஆ.ராசா, கோயம்புத்தூரில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், அந்த நிலம் பினாமி நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

மேலும், இந்த ரூ.55 கோடி மதிப்பிலான இந்த நிலம் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து எனவும், எனவே அதை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆ.ராசாவி தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் நிறுவனம் தொடங்கியதில் இருந்து எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் நிறுவனத்தில் பெறப்பட்ட முழுப் பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் இருந்து பெறப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ,திமுக துணை பொதுச்செயலாளரும் ,முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராஜாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகளை அமலாக்க துறை கைப்பற்றியுள்ளது.


Spread the love
Exit mobile version