Site icon itamiltv.com

துரைமுருகனால் எழுந்து நடக்கவே முடியாது.. MLA-வாக சிறப்பாக செயல்பட முடியுமா? ஈபிஎஸ் அட்டாக்!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்கLai ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்பாடி தொகுதியில் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது இதுதான் கடைசித் தேர்தல் வயதாகிவிட்டது.

வாக்களியுங்கள் என கேட்டார் மக்களும் வாக்களித்து அவரை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுத்தனர்
அதுவும் 700 வாக்கு வித்தியாசத்தில் தான் அவர் வெற்றி பெற்றார்.

ஆனால் தற்பொழுது இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே அதிக தேர்தலில் வெற்றி பெற்ற பெருமை எனக்கு கிடைக்கும் எனக்கூறி வாக்கு கேட்கிறார். உங்களுக்கு பெருமை வேண்டும் என்பதற்காகவா தேர்தலில் நிற்பது என கேள்வி எழுப்பினார்.

அவருக்கு தற்போது 88 வயதாகிறது அவர் தேர்தலில் போட்டியிடுவது சொந்த விருப்பம் அதில் நான் தலையிட விரும்பவில்லை ஆனால் அவரால் நடக்கவே முடியவில்லை எழுந்திருக்க முடியாத அவர் எப்படி மக்களிடம் குறையை கேட்பார்.

சட்டமன்ற உறுப்பினர் என்றால் சட்டமன்ற முழுவதும் சுற்றி மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்,நடக்கும்போதே அவரைப் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள் நான் அவரை தவறாக கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

அதனால மக்கள் அனைவரும் நம்முடைய காட்பாடியில் நிற்கிற வேட்பாளர் ராமிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென ஆரணியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்தியாவை நம்பர் ஒன் மாநிலமாக கொண்டு வந்துள்ளதாக பேசி உள்ளார்.

2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் கடன் வாங்கியதில் இந்தியாவில் முதல் மாநிலம் என்றும் ஊழல் செய்ததில், போதைப் பொருள் புழக்கத்தில், பெண்கள் பாலியல் துன்புறுத்தலில், சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் முதல் மாநிலம் என பட்டியலிட்டு பேசினார்.

தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் என குறிப்பிட்டார்.

Exit mobile version