Site icon ITamilTv

என்னவொரு கொடுமை.. இந்த காய்ச்சலா சிறுவனுக்கு வந்தது? – உயிரை பறித்த டெங்கு..!

Spread the love

டெங்கு காய்ச்சல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. அண்மையில் 7ஆம் வகுப்பு மாணவர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்ததால் நகராட்சி சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதி முழுவதும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை காய்ச்சலால் அவதிப்படுவதால் சாலை ஓரங்கள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை கண்டறிந்து தடுப்பு கிருமிநாசனி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் அருகில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்படும் என்றும், நீண்ட நாள் பயன்பாடின்றி உள்ள பொருள்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


Spread the love
Exit mobile version