ITamilTv

நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு..!!

Spread the love

நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

டிசம்பர் 3, 10, 17, 24-ல் நெல்லையில் இருந்து இரவு 7மணிக்கு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 7.30க்கு மேட்டுப்பாளையம் சேரும்

இதேபோல் டிசம்பர் 4, 11, 18, 25 தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு ரயில் இயக்கம் மேட்டுப்பாளையத்தில் இரவு 7.45க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.45க்கு நெல்லை சென்றடையும்.

இதையடுத்து பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவையும் செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நவம்பர் மூன்றாவது வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் நவம்பர் 26 டிசம்பர் 3 ,10,17, 24, 21,31 ஜனவரி 7,14,,21,28 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும்

நாகர்கோவிலில் மாலை 4.35க்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.10க்கு தாம்பரம் சென்றடையும்

நவம்பர் 27 டிசம்பர் 4,11, 18,25 ஜனவரி 1,8,15, 22,29 இல் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரத்தில் காலை 8.05க்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 8.45க்கு நாகர்கோவில் சென்றடையும் என தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version