Site icon ITamilTv

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் – Guidelines

Guidelines

Guidelines

Spread the love

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மக்களை தேடி , மக்களின் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது

இந்நிலையில் இந்த திட்டத்தின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ முகாம் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும்.

ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட ஆட்சியர் வரைய வேண்டும்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்கு முன்

கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் கடைகோடியில் வாழும் பாமர மக்கள் மூட பயன் அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : https://itamiltv.com/full-power-to-premalatha-to-decide-alliance/

முதல்வரின் அறிவுறுத்தல் படி ஒவ்வரு ஊரிலும் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வரும் நிலையில்

மக்களின் முக்கிய குறைகளாக இடையூறுகளாக இருந்த பல பிரச்சனைகள் இத்திட்டத்தின் மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version