Site icon ITamilTv

பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – குடிநீரை வீணடித்த குடும்பங்களுக்கு அபராதம்..!!

Penalties for families

Penalties for families

Spread the love

பெங்களூருவில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் அங்கு (Penalties for families) குடிநீரை வீணடித்த குடும்பங்களுக்கு அம்மாநில அரசு அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூரில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி வருவதால் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண உள்ளூர் வாசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக கடும் வறட்சி நிலவுவதால், டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் விலை பொருட்களின் விலைகளும் மளமளவென உயர்ந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பெங்களூரு நகரில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரியவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்குமாறு தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இப்படி இருக்கும் சூழலில் குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களிடம் இருந்து ருபாய் 1.1 லட்சம் அபராதமாக பெறப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Also Read : https://itamiltv.com/ecuadormayor-brigitte-garcia-shot-dead/

கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக குடிநீர் வீணடிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் படி உத்தரவை மீறிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹5,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீறும்போது கூடுதலாக 500 விதிக்கப்படும் என்றும் ஸ்ட்ரிக்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி (Penalties for families) வரும் நிலையில் இதற்கு அம்மாநில அரசு எப்படி தீர்வு காண போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version