ITamilTv

கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு – மாஸ்க் அணிய மாவட்ட நிர்வாகம் அறிவுரை..!!

Spread the love

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே டெங்கு , டைபாய்டு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருகிறது .

தமிழகத்தை அச்சுறுத்தும் இது போன்ற வைரஸ் காய்ச்சல்களில் இருந்து பொதுமக்களை காக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

குழந்தைகள், முதியோருக்கு இந்த வைரஸ் தொற்று எளிதாக தாக்கலாம் என கூறப்படும் நிலையில் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தலைவலி, இருமல் பாதிப்பின் அறிகுறியாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது .


Spread the love
Exit mobile version