FUEL PUMP-பில் ஏற்பட்ட கோளாறால் 92,672 கார்களை ஹோண்டா நிறுவனம் திரும்பப் பெறவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
FUEL PUMP கோளாறு காரணமாக ஆக. 2017ல் இருந்து ஜூன் 2018 வரை தயாரிக்கப்பட்ட ஹோண்டா City, Jazz, Amaze, Brio உள்ளிட்ட மாடல்களில் 92,672 கார்களை திரும்பப் பெறவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Also Read : ‘வேட்டையன்’ படத்தின் ‘மனசிலாயோ’ வீடியோ பாடல் வெளியானது..!!
ஹோண்டா கார்ஸ் இணையதளத்தில் Product Recall பக்கத்தில் VIN நம்பரை கொடுத்து தங்கள் கார் இதற்கு தகுதி வாய்ந்ததா என சரிபார்த்து டீலர்ஷிப்களில் கோளாறான பாகத்தை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்களில் முக்கிய பங்காற்றி வரும் ஹோண்டா நிறுவனத்தில் இப்படி ஒரு கோளாறின் காரணமாக இத்தனை ஆயிரம் கார்களை திரும்பப் பெறவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.