ITamilTv

“ஐ நோ ஹேப்பி..” இங்கிலீஷ் தெரியல..! டீச்சர் திட்டியதால் ப்ளஸ்1 மாணவி தற்கொலை..!

Spread the love

காஞ்சிபுரத்தில், ஆங்கிலம் (english subject) சரியாக எழுத படிக்கத் தெரியவில்லை என மன உளைச்சலுக்கு ஆளான பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள புத்தேரி கிராமத்தில், ரஜினிகாந்த்-லதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

ரஜினிகாந்த், தற்போது சாலபோகம் பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டி வருவதாகவும், தற்போது புத்தேரியில் வசித்து வரும் இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் நர்சிங் கல்லூரியிலும், அடுத்த இரண்டு மகள்களும் பள்ளிப் படிப்பையும் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பதினோராம் வகுப்பு படித்து வந்த அவரது இரண்டாவது மகள் தனிஷியா ஆங்கிலம் தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறார். ஆனால், ஆங்கில வகுப்பில் (english subject) கவனக்குறைவு காரணமாக மதிப்பெண் குறைவாக வாங்கியதால் ஆசிரியரை கண்டித்திருக்கிறார்.

மேலும். நாளை பள்ளி வரும்போது பெற்றோரை அழைத்து வரவேண்டும் எனவும் ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்தபோது வகுப்பறையில் நடந்த விவரங்களை யாரிடமும் கூறாமல் தனது படுக்கை அறைக்கு சென்று சோகமாக இருந்து இருக்கிறார்.

இதனையடுத்து, நேற்று மாலை 6.30 மணி அளவில் வீட்டின் படுக்கையறையின் கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகில் இருந்த உறவினர்களை அழைத்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாணவி சடலமாக கிடந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மாணவியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

english subject

இதனையடுத்து, மாணவியின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவியின் அறையில் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது அவர் வழக்கமாக டைரி எழுதும் பழக்கம் உள்ளவர் என்பதும், அதில் ஆங்கிலம் பேசவும், எழுதவும் தெரியாமல் இருந்ததால் வகுப்பறையில் சக மாணவிகளின் முன்னிலையில் ஆங்கில ஆசிரியர் திட்டியதாகவும் எழுதியுள்ளார்.

மேலும், ஆரம்பத்தில் இருந்து சரியான ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தால் இதுபோன்ற நிலை எனக்கு ஏற்பட்டு இருக்காது எனவும், இதனால், “ஐ நோ ஹேப்பி” எனவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், தனது அக்கா மற்றும் தங்கை ஆகியோர் நன்றாக படிப்பதால் அவர்களை நன்றாக படிக்க வையுங்கள் எனவும் உருக்கமாக எழுதியுள்ளார்.

பதினோராம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு இறந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Exit mobile version