சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக அதி நவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் :
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக டிச.16 முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அல்டிரா டீலக்ஸ், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; www.tnstc.in மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி வாயிலாக பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து முழு விவரங்களை தெரிந்துகொள்ள சிறப்பு தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மகரந்த பூஜைக்காக செல்லும் பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ள இந்த சிறப்பு பேருந்து வசதியினை முறையாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.