அண்ணா பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டம் போலியான சம்பவத்தைக் யூட்யூபர்ஸ் கோபி மற்றும் சுதாகர் கலாய்த்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யூட்யூபர்ஸ் கோபி மற்றும் சுதாகர் . இவர்களுடைய யூடியூப் சேனலில் அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வுகளுடன் கலந்து பேசி ரசிகர்களைக் கவர்ந்து தங்களுக்கென ஒரு மாபெரும் கூட்டத்தை உண்டாக்கியவர்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும் அந்த விழாவில்,பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை நடத்தும் சுதாகர மற்றும் கோபி இருவருக்கும் “இன்ஸ்பிரேஷன் யூத் ஐகான்” விருது வழங்கப்பட்டது.மேலும் இந்த விருது மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வழங்கப்பட்டதாகத் தன்னார்வ நிறுவனம் ஒன்று வழங்கியது
இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டம் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பு புகார் அளித்தது.
யூடியூபர்ஸ் சுதாகர் மற்றும் கோபி இருவருக்கும் “இன்ஸ்பிரேஷன் யூத் ஐகான்” வழங்கப்பட்ட விருது போலியானது குறித்து அவர்களிடம் கருத்து கேட்டபோது, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மோசடியாக பயன்படுத்தும்போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் ,பெயரை மட்டும் வைத்து நம்பக்கூடாது.
எந்த திட்டத்திலிருந்து அழைப்பைப் பெற்றாலும் அதன் பின்னணி குறித்து அவர்களே முழுமையாகத்தெரிந்த பிறகே கலந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் சுதாகர் மற்றும் கோபிநாத் இருவரும் அச்சச்சோ நம்ம ஏமாந்து போய்விட்டோமே என்று கவலைப்படாமல் நம்ம சேனலுக்கு நல்ல கன்டென்ட் கிடைச்சி இருக்கு என்று சொல்லி அடுத்த வீடியோவில் கன்டென்ட்டாக அவர்களுடைய யூடியூப் சேனலில் இந்த சம்பவத்தைக் கலாய்த்து வீடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மனதிலிருந்த வேதனைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்திய கோபி மற்றும் சுதாகரருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் ,யாரு சாமி நீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்