ITamilTv

புதிதாக விண்ணப்பிக்கும் ரேஷன் அட்டைகள் -வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு?

Spread the love

தமிழகத்தில் புது ரேஷன் கார்டு விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று, ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ரேஷன் கார்டுகளை வைத்திருப்பதாகவும், புதிதாக விண்ணப்பிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிலர் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை பெயரில் ஒரு ரேஷன் கார்டும், மகன், மருமகள் பெயரில் மற்றொரு ரேஷன் கார்ட்டிற்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு தனித்தனி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அந்த வீட்டில், புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால், பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள்.

இந்த நிலையில் ஒரு குடும்பத்திற்கு 2, 3 ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி தமிழகத்தில் புது ரேஷன் கார்டு விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று, ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ள கிச்சன் எத்தனை? கேஸ் சிலிண்டர் எத்தனை உள்ளது? அது யார் பெயரில் இருக்கிறது? என ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


Spread the love
Exit mobile version