தமிழகத்தில் ஒரே அரசுப் பள்ளியில் படித்த இரு மாணவர்கள் நீட் தேர்வில் வென்று அரசின் இடஒதுக்கீடு மூலம்
மருத்துவ கனவை எட்டிப்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி அருகே உள்ள கமலை கிராமத்தில் ரவி மற்றும் நாகராஜ் என்ற மாணவர்கள் ஒரே அரசுப் பள்ளியில் படித்து, அரசின் இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த அசத்தியுள்ளனர் .
Also Read : இ.பி.எஸ் மீதான அவதூறு வழக்கு – செப்.19ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
மாற்றுத்திறனாளியான நாகராஜ், ஆடு மேய்த்துக்கொண்டு கல்வியிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். தற்போது நீட் தேர்வில் 136 மதிப்பெண் பெற்று மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
அதேபோல் நன்றாக படித்து நீட் தேர்வில் 592 மதிப்பெண்கள் பெற்ற ரவி, அரசின் 7.5% இடஒதுக்கீடு மூலம் அதே கல்லூரியில் தேர்வாகியுள்ளார்.
சோதனைகள் பல கடந்து சாதித்து காட்டியுள்ள இந்த மாணவர்களுக்கு தற்போது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.