Site icon ITamilTv

ஆம்புலன்ஸ் ஆக மாறிய அரசுப் பேருந்து – கேரளாவில் நடந்த திக் திக் சம்பவம்..!!

kl govt bus

kl govt bus

Spread the love

கேரளாவில் அரசு பேருந்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், ( kl govt bus ) அரசுப் பேருந்திலேயே அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு நல்லபடியாக குழந்தையும் பிறந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன், நேற்று அம்மாநிலத்தின் அரசுப் பேருந்தில் பயணித்தார். இந்நிலையில் பேருந்தில் பயணித்த சிறிது நேரத்தில் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து துரிதமாக செயலபட்ட ஓட்டுநர் பேருந்தை உடனடியாக அருகில் இருந்த அமலா மருத்துவமனையை ஓட்டி சென்றார். பேருந்து மருத்துவமனைக்கு செல்வதற்குள்ளாக பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துவிட்டது .

Also Read : மொபைல் ‘ரீசார்ஜ்’ கட்டணம் விரைவில் உயர்வு..? – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மருத்துவமனை வாசலில் அனைத்து மருத்துவ உபகரணங்களுடனும் மருத்துவர்கள், செவிலயர்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் பேருந்து மருத்துவமனையை அடைந்ததும், உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்ட்டப்பட்டு அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பேரூந்துக்குள்ளேயே பிரசவம் பார்க்கப்பட்டது .

சிறிது நேரத்தில் அந்த பெண்ணிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு கேரள மாநில அரசு பேருந்து ஊழியர்களும், ( kl govt bus ) மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தாயையும், சேயையும் காப்பாற்றியதற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

இந்த சம்பவம் குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version