தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 நியாய விலைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் அரிசி, கோதுமை, சக்கரை, உள்ளிட்ட பல பொருட்கள் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் ஏழை நடுத்தர குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த ரேசன் கடைகளில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் பொது விநியோகத் திட்டத்தில் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மற்றும் புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு நேரில் வருகை தர இயலாதவர்கள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படுகிறது.