Site icon ITamilTv

ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்.. ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனம்!!

Spread the love

வீடுகளுக்கே நேரடியாக வந்து மளிகை மற்றும் மருந்து பொருட்களை விநியோகம் செய்யும் ட்ரோன்கள்.

தற்போதைய காலகட்டத்தில் மளிகை மற்றும் மருந்துப் பொருட்களின் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பிக்பாஸ்கெட் மற்றும் க்ரோஃபர்ஸ் போன்ற ஆன்லைன் மளிகை தளங்கள் மனிதவள நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் உணவு விநியோக நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato ஆகியவை மளிகை மற்றும் மருந்துப் பொருட்கள் ஆர்டர்களை வீட்டிற்கே கொண்டு சென்று டெலிவரி செய்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது புதிதாக ட்ரோன்கள் மூலமாக நேரடியாக வீடுகளுக்கே மளிகை மற்றும் மருந்து பொருட்களை விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனம்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் ட்ரோன்கள் மூலமாக நேரடியாக வீடுகளுக்கே மளிகை மற்றும் மருந்து பொருட்களை விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக முதற்கட்டமாக தற்போது ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ட்ரோன் சேவையை தொடங்க உள்ளது.

இதுகுறித்து ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவன துணைத் தலைவர் இஷான் குல்லார் கூறுகையில்..,

“கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் ட்ரோன்கள் மூலம் மளிகை பொருட்கள், மருந்து பொருட்களை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். முதல்கட்டமாக நியூ டவுன் பகுதியில் பொருட்களை ட்ரோன்கள் வாயிலாக விநியோகம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version