ITamilTv

புயலால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்..!!

Spread the love

தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு இன்று முதல் வரும் டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்” டியலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை; செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04:12:2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் வரும் புதன்கிழமை (13.12.2023) அன்று அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன .

இதையடுத்து பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது.இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு இன்று முதல் வரும் டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version