மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் குவியல் குவியலாக உணவு வீணாக்கப்பட்டு கொட்டப்பட்டு இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபின் அக்கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (20.08.23) நடைபெற்றது.
முன்னதாக இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான உணவு சமைக்கும் பணி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. நெல்லை கேட்டரிங் என்ற நிறுவனம் தான் உனவு சமைக்கும் பொறுப்பை ஏற்று சமைத்தனர்.
அந்த வகையில் உணவு சமைப்பதற்கு மட்டும் 10,000 சமையல் கலைஞர்களும், பரிமாறுவதற்கு 5,000 நபர்களும் பணியமர்த்தப்பட்திருந்தனர். தயிர் சாதம், பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தேங்காய் சாதம் என வெரைட்டி வெரைட்டியாக உணவுகள் தயாரிக்கப்பட்டன.
இதற்காக டன் கணக்கில் அரிசி மூட்டைகளும், வெங்காயம், தக்காளி உட்பட காய்கறி மூட்டைகளும் வரவழைத்து சமையல் செய்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் சமைக்கப்பட்ட உணவுகள் வீணடித்து கொட்டப்பட்டு இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.